Pages

Friday, August 31, 2012

Rare "Blue Moon" can be seen tonight | அரிதான "புளூ மூன்' இன்றிரவு காணலாம் Dinamalar

Saturday, August 18, 2012

நாம் வயதுக்கு வருவது 18 இல் அல்ல: ஆராட்சி முடிவு


undefinedதற்பொழுது உலகலாவிய ரீதியில் வயதுக்கு வந்தவர்கள் பிரிவினராக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கருதப்படுகிறர்கள்.
ஆனால் இது தவறு என்று மறுக்கிறது ஆய்வு ஒன்று.
பிருத்தானியாவின் Lancet ஆய்வு நிறுவன விஞ்னானிகளே 18 வயதை வயதுக்குவந்துவிட்டது என்று சொல்வது தவறு என்கிறார்கள்.
அவர்களின் ஆய்வு முடிவின்படி, மனித மூளை 24 வயதில் தான் பக்குவப்படுவதாக தெரியவருகிறது.
24 வயதை கடந்தவர்களே சரியான தீர்மானங்களை எடுக்க கூடிய அளவுக்கு மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஆகிறார்கள் என மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ராக்கெட் விடும் இந்தியா, தட்டம்மை நோய் தடுப்பில் பின்னனியில்?


மீசல்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டம்மையால் ஏற்படும் குழந்தை மரணங்கள் ஒரு பக்கம் உலக அளவில் வேகமாக குறைந்துகொண்டிருந்தாலும் இந்தியாவில் இத்தகைய மரணங்கள் உரிய வேகத்தில் குறையாமல் இருப்பது கவலை தருவதாக லான்செட் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆய்வுக்கட்டுரை கவலை வெளியிட்டிருக்கிறது.
உலக அளவில் 127 நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்த இந்த ஆய்வுக்கட்டுரை ஆசிரியர்கள், 2010 ஆம் ஆண்டு உலக அளவில் தட்டம்மையால் ஏற்பட்ட சிறார் மரணங்களில் 47 சதவீத மரணங்கள் இந்தியாவில் நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதே காலகட்டத்தில் ஆப்ரிக்க நாடுகளில் தட்டம்மையால் ஏற்படும் சிறார் மரணங்களின் சதவீதம் 36 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தட்டம்மை மரணங்களை தடுப்பதில் இந்தியா ஆப்ரிக்க நாடுகளைவிட பின் தங்கியிருப்பது கவலை தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படியான மரணங்களை தடுக்கவேண்டுமானால், இளம்பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் தட்டம்மை தடுப்பு மருந்தளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த தடுப்பு மருந்துகள் கட்டாயம் அளிக்கப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

ஜிம் போகும் வாலிபர்களே…! கொஞ்சம் இதை படியுங்கள்…!


உடலை கட்டுக்கோப்பாக வைப்பது எல்லா ஆண்களுக்கும் பிடித்தமான ஒன்று. அதற்கு அவர்கள் நாடுவது ஜும் களையே.
கட்டழகைப் பெற ஜிம்மில் அதிக எடையைத் தூக்கி பயிற்சி செய்யவேண்டுமென பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடா மெக்மாஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தசைகள் உருவாக்கத்தில் பெரிய எடைகளை விட, சிறிய எடைகள் அதிக பலன் தருகின்றன என்கின்றனர். வழக்கமாக செய்யப்படும் தீவிர பயிற்சிக்குப் பதிலாக, அதிக நேரம் சிறிய எடையைத் தூக்குவது, தசை உருவாக்கச் செயல்பாட்டைத் தூண்டி அதிக தசைகள் உருவாக வைக்கும் என்று இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரான நிக்கோலஸ் பர்ட் கூறுகிறார்.
இதற்குக் காரணம் அதிக எடை தூக்குபவர்கள் அப்பயிற்சியை சிறிது நேரமே செய்ய முடியும் என்பதால் ஜிம் நேரம் சீக்கிரம் முடிந்துவிடுகிறது. ஆனால் சிறிய எடையைத்
தூக்கினால் அதிக நேரம் ஜிம்மில் இருக்க வேண்டியிருக்கும். குறைந்த நேரம் அதிக எடையைத் தூக்குவதை விட, அதிக நாட்கள் குறைந்த எடையைத் திரும்பத் திரும்ப தூக்குவதால், தசை உருவாக்கத் தூண்டல் பல நாட்கள் நீடிக்கும். எனவே நீண்ட நாட்கள் அழகாக இருக்கவும் முடியும்.
ஆகவே ஜிம்மில் மற்றவர்கள் அதிக எடை தூக்குகிறார்களே என்று நீங்களும் முயற்சிக்காமல், எளிதாக சிறிய எடைகளை தூக்கி கட்டழகு பெறுங்கள்… வருங்கால சூர்யாக்கள் ஆகுங்கள்…!

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்


கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.
கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் ‘ஜஸ்ட் லைக் தட்’ இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.
ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.
ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.
இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.
அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.
4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.

நூறு கோடி அண்டங்கள், ஏலியன்களை அலசவுள்ள ரேடியோ அலை தொலைநோக்கிகள்!


undefined
உலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலுமாக அமையப்போகிறது.
மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுகொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
பிரபஞ்சம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், வேற்று கிரகங்களில் உயிரினங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பிலும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியை விட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்த புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொலைநோக்கி ஒரே நாட்டில் அல்லாமல் மூன்று நாட்டில் பகிர்ந்து வைக்கப்படுவதற்கு அறிவியல் காரணங்களை விட அரசியல் அவசியமே அதிக காரணம் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
Source: BBC Science

Friday, August 17, 2012

24 மணி நேரத்தில் நடக்கும் விறு விறு கதை “இது சாருவோட டேட்டிங்”

 மேலை நாடுகளின் மூலம் நம் நாட்டில் எவ்வளவோ சமூக பொருளாதாரத் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான் டேட்டிங் எனப்படுவது.
ஆனால் நம் நாட்டு பண்பாட்டுக் கலாச்சார சூழலுக்கு இது முற்றிலும் முரணானதாகும். ஆனாலும் நம் நாட்டில் டேட்டிங் கலாச்சாரம் பரவி வருகிறது.
இப்படிப்பட்ட டேட்டிங் போக்குபற்றிய பின்னணியை மையப்படுத்தி “இது சாருவோட டேட்டிங்” என்கிற படம் உருவாகி வருகிறது. நந்து சினி ஆர்ட்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரிப்பதுடன் கதை-திரைக்கதையையும் திருச்சி ஜி.செல்லத்துரை எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக கேரளாவைச் சேர்ந்த மொடலிங் இளைஞர் கிரிஷ் அறிமுகமாகிறார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்திருப்பவர். கதாநாயகியாக ஸ்வப்னா அறிமுகமாகிறார். பெங்காலிப் பெண்ணான இவர் குஜாரத் மொழிப்படமொன்றில் நடித்திருக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி. எம் குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாவனா ஸ்ரீ ரேகா, சசி ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் நாகராஜன் கூறுகையில், நம் நாட்டுக்குத் தேவையில்லாதது மட்டுமல்ல நம் கலாச்சாரத்துக்கெதிரானது டேட்டிங். ஆனால் இன்று படித்து விட்டு ஐடியில் பணிபுரிவர்கள் மத்தியில் இந்த டேட்டிங் பரவி வருகிறது.
இந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். டேட்டிங்குக்கு விருப்பமில்லாத நாயகியைச் சம்மதிக்க வைத்து வாரக்கடைசி நாளில் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்கிறான் நாயகன்.
அங்கு இருவரும் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
ஒரு நாள் காலையில் தொடங்கி மறு நாள் காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாகும். எனவே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
டேட்டிங் என்பது நம் கலாச்சாரத்தில் இல்லை. எனவே நம் மொழியிலும் அதற்கான வார்த்தை இல்லை. எனவே படத்தின் தலைப்பை டேட்டிங் என்கிற அந்நிய வார்த்தையையே பயன்படுத்த வேண்டியதாயிற்று.
இன்று டேட்டிங் அதிகம் பரவி வருவதால் குற்றம் செய்பவர்களும் அதிகமாகியிருக்கிறார்கள் என்றும் இதனால் ஏற்படும் விபரீதங்கள் ஆபத்துகள் என்ன என்பதைச் சொல்லும் இப்படம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் எச்சரிக்கைப் பாடமாக அமையும் எனவும் கூறியுள்ளார்
சென்னை, பாண்டிச்சேரி, சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது.