Pages

Monday, August 13, 2012

100 கோடி இந்தியர்களின் டேட்டாவை பராமரிக்கும் பொறுப்பில் எச்சிஎல்!


 ஒரு வருட கால பெரும் தாமதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை ணையம், சர்வீஸ் புரவடைர் ஒப்பந்தத்தை எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 2200 கோடியாகும்.
100.2 கோடி இந்திய குடிமக்களின் தகவலக்ள், அடையாள அட்டை எண் உள்ளிட்ட டேட்டாவை இனி எச்சிஎல் நிறுவனம்தான் பராமரித்து வரும். உலகிலேயே மிகப் பெரிய திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தை இந்த வருட ஆரம்பத்திலேயே கையெழுத்தி விட்டது அடையாள அட்டைக்கான ஆணையம். இருப்பினும் எச்சிஎல் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஆகஸ்ட் 7ம் தேதிதான் முடிவடைந்தது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 2200 கோடியாகும். டிசிஎஸ், அக்சென்ச்சர், டெக் மகிந்திரா, விப்ரோ என பெரிய பெரிய நிறுவனங்களையெல்லாம் முந்திக் கொண்டு எச்சிஎல் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் போட்டிக் களத்தில் இருந்த ஐபிஎம், எச்பி போன்றவை பின்னர் விலகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
7 வருட காலத்திற்கு இந்த ஒப்பந்தம் எச்சிஎல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment