Pages

Monday, August 13, 2012

அழகுராஜாவாக மாறுகிறார் கார்த்தி

இயக்குனர் ராஜேஷ் கார்த்தியை வைத்து 'அழகுராஜா ஆல் இன் ஆல்' என்ற புதிய படமொன்றை இயக்க இருக்கிறார்.
இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ராஜேஷின் முந்தைய படங்களைப் போலவே நாயகனின் நண்பனாக சந்தானம் கலாய்க்க காத்திருக்கிறார்.
அலெக்ஸ் பாண்டியன் படத்தினை முடித்து விட்டு பிரியாணி படத்தில் நடிக்க இருப்பதால் அழகுராஜா படத்தை கார்த்தி எப்போது தொடங்குவார் என்று கேள்வி எழுந்தது.
அழகுராஜா படப்பிடிப்பு குறித்து ராஜேஷ், இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து விட்டது.
படப்பிடிப்பு செப்ரெம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. அதற்குள் கார்த்தி பிரியாணி படத்தின் ஒரு ஷெட்யூல் முடித்து இருப்பார் என்று தெரிவித்து இருக்கிறார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கும் 'ஆண்பாவம்' படத்தின் ரீமேக் உரிமையை தான் இயக்கவில்லை என்றும் ரீமேக் படங்களை இயக்கும் எண்ணம் தனக்கு எப்போதும் கிடையாது எனவும் ராஜேஷ் கூறியுள்ளார்

No comments:

Post a Comment