Pages

Monday, August 13, 2012

பாசக்கார பயபுள்ள பிரியங்கா சோப்ரா


Priyanka Chopra Is Dad S Lil Gal பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தந்தையின் மீதுள்ள பாசத்தை தெரிவிக்கும் வகையில் டாட்டூ குத்தியுள்ளார்.
தற்போது நடிகர், நடிகைகள் டாட்டூ குத்துவது பேஷனாகிவிட்டது. நம்ம நமீதா முதுகில் நட்சத்திர டாட்டூ குத்தியுள்ளார். குஷ்பு, த்ரிஷா, உதயநிதி ஸ்டாலின் என்று ஒரு பெரிய பட்டாளமே டாட்டூ குத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. குஷ்பு தனது மகள்களின் பெயரையும், உதயநிதி தனது குழந்தைகளின் பெயர்களையும் டாட்டு குத்தியுள்ளனர்.
இதேபோன்று பிரியங்கா தான் தனது தந்தை மீது தான் வைத்திருக்கும் அன்பைத் தெரிவிக்க 'டாட்ஸ் லிட்டில் கேர்ள்' என்று டாட்டூ குத்தியுள்ளார். பிரியங்காவின் தந்தை அசோக் சோப்ரா புற்றுநோயுடன் போராடி வருகிறார். இதனால் பிரியங்கா தனது தந்தைக்காக தினமும் மனமுருக பிரார்த்தனை செய்து வருகிறார்.
பிரியங்காவுக்குள்ள இப்படி ஒரு பாசக்கார புள்ளயா?

No comments:

Post a Comment